பொதுவாக தானியங்கள் முளைக்கும்போது, ஊட்டச்சத்து எதிர்ப்புச் சத்துக்கள் அகற்றப்பட்டு, எளிதாக ஜீரணம் ஆகி மற்ற வைட்டமின்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது. சூடு படுத்தி சமைக்கும் போது வைட்டமின் அளவு குறைகிறது அதே சமயம், முளைவிட வைப்பது ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. தானியங்கள் முளைப்பதினால் அதிலுள்ள புரத சத்தின் அளவும் அதிகரிக்கிறது.
முளை விட வைக்கும் போது வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களின் உடலால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும் பைடிக் அமிலத்தின் ஒரு வடிவமான பைட்டேட்டையும் உடைக்கிறது. இதன் காரணமாகவே சாதாரண தானியங்களை விட முளைத்த தானியங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
முளைப்பதால் துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய தாத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் தன்மையை எளிதாங்குகிறது மற்றும் அதிகரிக்கிறது. முளைப்பது சில தானியங்களில் காணப்படும் பீனால் மற்றும் டானின் போன்றவற்றையும் குறைக்கிறது. இதன் அளவு ஊற வைக்க எடுத்து கொள்ளும் நீரின் pH, முளைக்கும் முளையின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும்.
முளைப்பது தானியங்களில் உள்ள ஒருவகை கரையாத நார்ச்சத்தின் அளவை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு வகை நார்ச்சத்தானது மலத்தை உருவாக்கி குடல் வழியாக நகர்த்த உதவுதன் மூலம் மலச்சிக்கலின் வாய்ப்பைக் குறைக்கிறது. முளை கட்டிய தானிய உணவுகள் மிகவும் சத்தான உணவாக விளங்குவதால் காலை உணவுடன் உண்ணலாம்.
இதில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரதங்கள் நிறைந்துள்ளன. மேலும் முளைவிடும் போது புரதம் மட்டுமின்றி, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் நிறைந்துள்ளன.
முளைகளில் போதுமான வைட்டமின் சி உள்ளது. இது சிறந்த ஆக்சிஜனேற்றியாக இருப்பதால் உடலில் உள்ள அனைத்து ஃப்ரீ ரேடிக்கல்களையும் அழித்து முடியை வலுவாக்குகிறது. இது அலோபீசியா, ஹிர்சுட்டிசம் போன்ற பல்வேறு கூந்தல் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் முடி ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.