Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிதில் கிடைக்கும் கமலா ஆரஞ்சில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

Kamala Orange 1
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:18 IST)
கமலா ஆரஞ்சு மிகக் குறைவான அளவு கலோரி கொண்ட பழமாக இருந்தாலும் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியதாக உள்ளது. இந்த வகை ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.


கண் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய கரோட்டினாய்டுகள் என்னும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர அதில் இருக்க கூடிய நார் சத்து குடலியக்கத்தை சீராக்கி மலம் எழுதில் வெளியேற உதவி செய்கிறது.

கமலா ஆரஞ்சில் உள்ள பிலேவனாயுடுகள் அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்கிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர நன்மை பயக்கும். மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி கருகருவென்று அடர்த்தியாக வளர உதவும் குறிப்புக்கள் !!