Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் நல்லெண்ணெய் !!

Advertiesment
Sesame Oil
, செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:48 IST)
நல்லெண்ணெய்யில் புரோட்டீன் மிக குறைந்த அளவே காணப்படும். ஆனால் எள் எண்ணெய்யில் மற்ற எண்ணெய்யை விட அதிகமாக கிட்டத் தட்ட 4.5 முதல் 5 கிராம் வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.


தொடர்ந்து முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யை உச்சந்தலையில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சியை துரிதப்படுத்தி முடி அடர்த்தியாக ஊக்குவிக்கும்.

நல்லெண்ணெய் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது மூட்டு பிரச்சனைகள் மற்றும் பல்வலி போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும். நல்லெண்ணெய்யில் ஒமேகா-6 என்ற ஒருவகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.

இளநரை என்று சொல்லப்படும் முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கிறது. நல்லெண்ணெய்யைக் கொண்டு தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து வருவது முன்கூட்டிய நரையைத் தடுக்கலாம். மேலும் இந்த எண்ணெய் தலை முடியை கருமையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

நல்லெண்ணெய் என்று சொன்னாலே சமையலுக்கு பயன்படும் எண்ணெய் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை தவிர இன்னும் பல பயங்களை கொண்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்

ஆயுர்வேத மருத்துவத்தில் மசாஜ் சிகிச்சையிலும் நல்லெண்ணெய் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய்யில் உடலின் வெப்பநிலையை குளிர்விக்கும் தன்மை உள்ளதால் உடல் சூட்டிற்கு நல்லெண்ணெய் குளியல் பரிந்துரைக்கப் படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறதா வெள்ளரிக்காய் !!