Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாளய பட்ச காலம் முன்னோர்களின் சாபங்களை போக்குமா...?

மகாளய பட்ச காலம் முன்னோர்களின் சாபங்களை போக்குமா...?
, திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:43 IST)
11/09/2022 தேதி முதல் 25/09/2022 வரை பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.


தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம்.

அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில் சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்சகாலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலை கள் கடலுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.

வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளு க்கு பசிக்கு உணவு படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் ப்ரீதியடைந்து நம்மை நன்கு அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாளய பட்ச வழிபாட்டின் நன்மைகள் என்ன...?