Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!

Advertiesment
Banana stem juice
தனது இலை, காய், பழம், தண்டு என சகல பாகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு உணவாவதுடன், சத்துகளையும் அள்ளிக் கொடுப்பது வாழைமரம். அதன் வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சகல ஆரோக்கியத்தையும் வழங்கும்.
  • வாழைத்தண்டு ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் சேர்வது தடுக்கப்படுவதுடன், சிறுநீரக கல் இருந்தால் அதையும் கரைக்கிறது.
  • வாழைத்தண்டு ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடை குறைக்க விரும்புவோர் காலையிலேயே ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம்.
  • வாழைத்தண்டு ஜூஸில் இரும்பு மற்றும் விட்டமின் பி6 இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகையை குணமாக்குகிறது.
  • இன்சுலினை மேம்படுத்துவதில் வாழைத்தண்டு ஜூஸ் சிறப்புமிக்கது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும்.
  • வாழைத்தண்டுடன் சிறிது இஞ்சி சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும்.
  • மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் ஏற்றது. மேலும் செரிமான தன்மையை அதிகப்படுத்துகிறது.
  • வாழைத்தண்டு ஜூஸில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளதால் வாரத்துக்கு மூன்று முறை அருந்து வந்தால் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பான சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள்!