கிராமங்கள், சாலை ஓரங்களில் சர்வ சாதாரணமாக காணப்படும் சித்தகத்தி தாவரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது.
சிறிய இலைகளையும், மஞ்சள் மலர்களையும் கொண்ட சித்தகத்தி தாவரம் சிற்றகத்தி, கருஞ்செம்பை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
-
சித்தகத்தி தாவரத்தின் இலையை அரைத்து கட்டிகளில் கட்டி வந்தால் பழுத்து உடையும். காயமும் குணமாகும்.
-
வாயுக் கட்டிகளை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெய்யில் சித்தகத்தி இலையை அரைத்து கட்ட வேண்டும்.
-
சித்தகத்தி இலையை சாறு பிழிந்து 15 மி.லி அளவு மருந்தாக சாப்பிட்டு வந்தால் கரப்பான், மேகரோகக் கிருமிகள் அழியும்.
-
சித்தகத்தில் இலையுடன், குப்பை மேனி கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்து தடவி குளித்து வந்தால் சொறி, சிரங்கு, படை குணமாகும்.
-
தேங்காய் எண்ணெய்யில் சித்தகத்தி பூக்களை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் ஒற்றை தலைவலி, நோவு நீங்கும்.
-
சித்தகத்தி பூ, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணியை நல்லெண்ணெயில் காய்ச்சி இளம்சூட்டில் தலைக்கு தேய்த்து குளித்தால் தலை முடி நீளமாக வளரும்.