சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கர் சில வகை சத்துகளை கொண்டிருந்தாலும், அதை சாப்பிடுவது வேறு சில உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.
பலரால் விரும்பி உண்ணப்படும் மீல் மேக்கரானது சோயா பீன்ஸின் சக்கையில் தயாரிக்கப்படுவது ஆகும். மீல் மேக்கரில் சில சத்துகள் இருந்தாலும் சிலர் அதை சாப்பிடுவது ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சைவ பிரியர்கள் பலர் மீல் மேக்கரை அசைவ உணவுகளுக்கு மாற்றாக கருதுகின்றனர்.
-
மீல் மேக்கர் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
-
மீல் மேக்கர் அதிகம் சாப்பிடுவது புற்றுநோய் செல்கள் உற்பத்தியாக வழி செய்கிறது.
-
மீல் மேக்கர் நாள்பட்ட அழற்சி, கனிம குறைபாடுகளை ஏற்படுத்துவதுடன் புரத செரிமானத்தை தடுக்கிறது.
-
மீல் மேக்கரில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சிறுநீரக செயழிலப்பு மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை உண்டாக்கும்.
-
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பவதிகள் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மீல் மேக்கர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.