Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படையை எதிர்க்கும் பலம் கொடுக்கும் பனை நுங்கின் பயன்கள்..!

படையை எதிர்க்கும் பலம் கொடுக்கும் பனை நுங்கின் பயன்கள்..!
, திங்கள், 13 மார்ச் 2023 (08:47 IST)
தமிழ்நாட்டு உணவின் பாரம்பரிய அடையாளமான பனைமரத்திலிருந்து பல வகை பயனுள்ள பொருட்களை பெறுகிறோம். அதில் முக்கியமானது நுங்கு.
  • நுங்கின் மேலே உள்ள துவர்ப்பு சுவை கொண்ட தோல்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
  • கோடைகாலத்தில் தாகம் தணியவும், சூடு குறையவும் நுங்கு அற்புதமான உணவு. இதனால் நீர்கடுப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
  • அதிக சூட்டால் கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சினைகள் சரியாகும்.
 
  • நுங்கின் சத்துகள் அதீத பசி உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பினை அதிகப்படுத்துவதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
  • பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க நுங்கில் உள்ள ஆன்தோசயன் பெரிதும் உதவுகிறது.
  • கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் பிரச்சினைகளை நுங்கு கட்டுப்படுத்துகிறது.
  • கடின உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சகலருக்கும் தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் நுங்கில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா முழுவதும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்! – மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!