Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குதிகால் வலி வருவதை தடுக்கும் சில வழிகள் !!

Heels
, செவ்வாய், 24 மே 2022 (13:51 IST)
குதிகால் வலி வந்தால் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். மேலும் ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது.


குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போநீரோசிஸ் எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவதை தடுக்கலாம்.

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது.

குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி சைக்கிள் ஓட்டும் பயிற்சி.

உடல் பருமன் அதிகமாக இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. வீட்டுக்குள்ளும் காலணி அணிந்துதான் நடக்க வேண்டும்.

பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டும். அழுத்தமான ஷுக்களை அணியக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்க தவிர்க்கவேண்டிய உணவுமுறைகள் என்ன...?