Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகல வியாதிகளையும் குணமாக்கும் வேம்புவின் பயன்கள் !!

சகல வியாதிகளையும் குணமாக்கும் வேம்புவின் பயன்கள் !!
, செவ்வாய், 24 மே 2022 (10:06 IST)
வேம்பு மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தியை உடையது.


மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. வேப்ப இலை புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால், வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம், பூ, இலை, இலையின் ஈர்க்கு, வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

 வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம்.

வேப்பம்பூவானது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம், வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும். வேப்பிலைச் சாறு பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குங்குமப்பூ ஆரோக்கியத்திலும் சரும அழகிலும் எவ்வாறு பயன்படுகிறது....?