Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குங்குமப்பூ ஆரோக்கியத்திலும் சரும அழகிலும் எவ்வாறு பயன்படுகிறது....?

குங்குமப்பூ ஆரோக்கியத்திலும் சரும அழகிலும் எவ்வாறு பயன்படுகிறது....?
, செவ்வாய், 24 மே 2022 (09:45 IST)
குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.


விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள க்ரோசின் படுக்கையில் ஆற்றலுடன் செயல்பட வைக்கக்கூடியது.

குங்குமப்பூவில் உள்ள ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மங்கனீசு சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தவும் பயன்படுகிறது.

கர்ப்பமாக உள்ள பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை சேர்த்துகொள்ளலாம். குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும்.

குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும். முகம் பிரகாசமடையும்.

குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது. மேலும் குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிந்த தினசரி பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!