கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சைகள் பல்வேறு அத்தியாவசிய சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சையில் விட்டமின் பி6, விட்டமின் சி, இரும்புச்சத்து, கரோட்டீன்கள், கால்சியம், மக்னீசியம் ஆகிய பல சத்துகள் உள்ளன.
-
உலர் திராட்சைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு, அந்த தண்ணீரையும் குடித்தால் பல நன்மைகளை தருகிறது.
-
உலர் திராட்சை தண்ணீரை குடிப்பதால் அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குப்படுத்தப்படும்.
-
உலர் திராட்சையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நமது உடலை பாதுகாக்க உதவுகிறது.
-
உலர் திராட்சையில் இருக்கும் டார்டாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
-
உலர் திராட்சையில் உள்ள செறிவான இரும்புச்சத்து, காப்பர் உள்ளிட்ட சத்துகள் ரத்தசோகை பிரச்சினையை குணப்படுதும் திறன் கொண்டுள்ளது.
-
உலர் திராட்சை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை சீராக்க உதவும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
-
உலர் திராட்சையில் உள்ள ப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கொழுப்பை குறைக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்து.