Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு...!!

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சாறு...!!
கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும். கறிவேப்பிலையில் பலவிதமான ஊட்டச் சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக கண், முடி மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் பாதுகாக்கும்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதனுடன் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிக்கட்டி  நீரை தனியாக பிரித்து கொள்ள வேண்டும். கிடைக்கும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
 
கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டையாக உருட்டி பின்னர் அதை மோர் சேர்த்து கலந்து பருகினால் போதும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை குடிக்கலாம்.
 
கறிவேப்பிலை நீரை தொடர்ந்து குடிப்பதால் வாயுத்தொல்லை, வயிற்று போக்கு, பித்தம் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனையும் அதிக  அளவில் குறையும்.
webdunia
கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.
 
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.
 
கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மாற்று மருந்தாகவும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தில் பருக்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..?