ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.
ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
ஆலம் பழம் தசை வலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது.
பல்வலி ஏற்படும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டொருந்தால் பல்வலி போக்கும்.
பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்.
ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
ஆலமரத்தின் பழங்களை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.