Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!

Advertiesment
முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!
அதிகபடியான மருத்துவ நன்மைகளை கொண்டது வெந்தயம். சாதரணமாக் வெந்தயத்தை சாப்பிடுவதை விட அவற்றை முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது.
முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஒரு ஈரத் துணியில் கட்டி வைத்து, மறு நாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இதை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
 
முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
 
முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.
 
வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல்  பார்த்துக் கொள்ளும்.
webdunia
முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று  நினைப்பவர்கள் முளைகட்டிய வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
 
சருமம், கல்லீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செரிமானம் துரிதமாக நடைபெறவும் வழிவகை செய்யும்.  காய்ச்சலையும் குணப்படுத்தும்.
 
வயிறு பொருமல், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்ஃபீ எடு கொண்டாடு ..மெடிக்கல் செல்ஃபி எடுப்பதால் மக்களுக்கு நன்மை ! சூப்பர் தகவல்