Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
உத்தரப் பிரதேசம்

Mahendran

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (16:40 IST)
சகோதர பாசத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே, உத்தரப்பிரதேசத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது உறவுக்கார தங்கைக்கு ராக்கி கட்டிய இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியைச் சேர்ந்த சுர்ஜீத் என்பவர், ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கே, சித்தப்பாவின் மகள் 14 வயதுச் சிறுமிக்கு, சகோதர பாசத்தின் அடையாளமாக சுர்ஜீத்திற்கு ராக்கி கட்டினார்.
 
அன்றைய இரவே, சுர்ஜீத் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அறையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அந்த சிறுமியைத் தூக்கில் தொங்கவிட்டதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
 
மறுநாள் காலை, சிறுமியின் தந்தை தனது மகளின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில், சுர்ஜீத் முதலில் போலீசாரை திசை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், தீவிர விசாரணையின் முடிவில், சுர்ஜீத் தான் இந்தக் கொடூரமான குற்றத்தை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
இந்தச் சம்பவம், ரக்ஷா பந்தன் பண்டிகையின் புனிதத்தை அவமானப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகப் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!