Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்தது போல் நாடகமாடி கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த பெண்

Advertiesment
இறந்தது போல் நாடகமாடி கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த பெண்
, செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (16:20 IST)
உத்திரபிரதேசத்தில் இறந்ததாக கூறப்பட்ட மனைவி வேறு ஒரு நபருடன் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை செய்து வந்த போலீஸாரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். 
 
உத்திரபிரதேசத்தில் ராகுல் என்ற இளைஞருக்கும் ரூபி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சமீபத்தில் திடீரென ஒருநாள் ரூபியின் தந்தை தனது மகளை கொடுமை செய்து கொன்றுவிட்டதாக ரூபியின் கணவர் குடும்பத்தின் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
வழக்கு பதிவு செய்த போலீஸார் இறந்ததாக கூறப்பட்ட ரூபின் உடலை தேடி அலைந்தனர். ஆனால், அவரது சடலம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், ரூபியின் பேஸ்புக் கணக்கு மட்டும் ஆக்டிவாக இருந்துள்ளது. 
 
இதையடுத்து சந்தேகப்பட்ட போலீஸார் ரூபியில் பேஸ்புக் கணக்கை வைத்து அவரது மொபைல் எண்ணை கண்டுபிடித்துள்ளனர். இதன் பிறகு தீவிர விசாரணையில் ஈடுப்பட்ட போது ரூபி இறக்கவில்லை எனவும், வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. 
 
இந்நிலையில், ரூபி, அவரது கள்ளக்காதலன், அவரது தந்தை என மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல்: பாமக எச்சரிக்கை