Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைகளை அடிக்கவே தயங்கிய அபிராமி இப்படி செய்தது ஏன்? கணவர் விஜய் பகீர் வாக்குமூலம்

Advertiesment
கள்ளக்காதல்
, செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (10:32 IST)
அபிராமி இதுவரை குழந்தைகளை அடித்த்து கூட இல்லை என அவரது கணவர் விஜய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் பெற்ற குழந்தைகளையே தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கொடூர பெண்மணி அபிராமியை அவரது கள்ளக்காதலனான சுந்தரத்தை வைத்து நாகர்கோவிலில் கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் அவரது கணவர் விஜய் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அபிராமி குழந்தைகளை இதுவரை அடித்ததே இல்லை. குழந்தைகளின் படிப்பு மற்றும் தேவைகளை அபிராமியே சிறப்பாக செய்து வந்தார். 
 
அப்படி இருக்கும் வேளையில் அபிராமி இப்படி செய்திருப்பது ஆச்சரியமாகவும் வேதனை அளிக்கும் விதமாகவும் உள்ளது என்றும் சுந்தரத்தின் மீதான கள்ளக்காதல் மோகமே அபிராமியை பெற்ற குழந்தைகளை கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பது வேதனை அளிப்பதாக  விஜய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டமிட்டபடி அதே தேதியில் திருமணம்: அதிமுக எம்.எல்.ஏ உறுதி