Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் கழுத்தை நெறித்து கொன்றேன் - அபிராமி பகீர் வாக்குமூலம்

Advertiesment
மகனின் கழுத்தை நெறித்து கொன்றேன் - அபிராமி பகீர் வாக்குமூலம்
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (18:42 IST)
விஷம் அருந்திய மகன் மரணமடையாததால் கழுத்தை நெறித்து கொன்றேன் என அபிராமி அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி சென்ற அபிராமி விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பகீர் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
கள்ளக்காதலன் சுந்தரத்தோடு சேர்ந்து விழா தடையாக இருக்கும் கணவன் மற்றும் இரு குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்ட அபிராமி கடந்த 30ம் தேதி இரவே கணவன் விஜய், மகன் மற்றும் மகளுக்கு விஷம் அருந்திய பாலை கொடுத்துள்ளார்.
webdunia

 
ஆனால், அந்த விஷத்தில் வீரியம் குறைவாக இருந்ததால், கணவரும், மகன் அஜய்யும் காலையில் எழுந்துவிட்டனர். ஆனால், மகள் கார்னிகா மரணமடைந்து விட்டதை அபிராமி தெரிந்துகொண்டார்.  இது தெரியாமல், அலுவலகம் கிளம்பும் மகளை முத்தமிட விஜய் சென்றுள்ளார். ஆனால், அவள் நன்றாக தூங்கிறாள் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக்கூறி கணவரை அபிராமி தடுத்துவிட்டார்.
 
அதன்பின் விஜய் அலுவலகம் கிளம்பி சென்றதும், மகன் அஜய்க்கு மீண்டும் விஷம் அருந்திய பாலை அபிராமி கொடுத்துள்ளார். அதில் அஜய் மயக்கமடைந்துள்ளான். நீண்ட நேரமாகியும் அவன் மரணமடையாமல் மயக்கத்திலேயே இருந்ததால், நானே அவனின் கழுத்தை நெறித்து கொன்று விட்டேன் என அபிராமி அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிராமியை பிடிக்க போலீசார் வகுத்த பலே திட்டம்.....