உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியில், குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி தனது கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அமேதி பகுதியைச் சேர்ந்த அன்சார் அஹமது என்பவருக்கு சபேஜூல் மற்றும் நஸ்னின் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் குழந்தை இல்லை. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அஹமது இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் இரண்டாவது மனைவி நஸ்னினுக்கும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
									
										
			        							
								
																	
	 
	சம்பவம் நடந்த நேற்றிரவு, அஹமதுக்கும் நஸ்னினுக்கும் இடையே குழந்தை இல்லாதது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நஸ்னின், கத்தியை எடுத்து அஹமதுவின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஹமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக நஸ்னினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.