வக்ஃப் வாரிய நிர்வாகம் தொடர்பான மத்திய அரசின் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நன்கொடையாக அளிக்கும் நிலங்களையும் சொத்துகளையும் நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத்தின் செயல் முறையை மாற்றும் வகையில் 1995 சட்டத்தில் மத்திய அரசு சில முக்கிய திருத்தங்களை கொண்டு வந்தது.
மசோதாவில், முஸ்லிம் அல்லாதவர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர முடியும், மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களால் மட்டுமே வக்ஃப் சொத்துகள் அளிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் என்ன நடக்கும் என்பதி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்