Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டீ ’ கடையில் டீ போட்டு தரும் ’மேற்குவங்க முதல்வர்’ ... வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:32 IST)
அரசியல் தலைவர்கள் சமீபகாலமாக மக்களோடு மக்களாக இருப்பதற்கு அடையாளமாக சாலையோரக் கடைகளில்  நின்று டீ குடிப்பது. விவசாயத்தில் மக்களுக்கு உதவுவது. மக்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிடுவது என்று செயல்படுவது வழக்கம்.
அதிலும் தேர்தல் என்று வந்து வந்துவிட்டால் இது இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும். நம் தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் வெகு பிரபலம். தற்போது அதிமுக தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் நேரில் சென்று வருவது அதிகரித்து வருகிறது.
 
நம் நாட்டின் நரேந்திர மோடி கூட டீ போட்டுக் கொடுத்து, இன்று உயர்ந்த பதிவியில் அமர்ந்து ஆட்சி புரிகிறார். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலுக்கு வியூகம் வகுத்து வருகிறார். குறிப்பாக அவருக்கு பிஜேபின் வளர்ச்சி பெரும் தலைவலியை உண்டாக்கிஉள்ளது.
இந்நிலையில் மக்களை நேரில் சந்திக்கும் பொருட்டு,இன்று அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதியான திகாவுக்கு சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடைக்கு சென்று தானே டீ போட்டு மக்களுக்கு கொடுத்தார். இந்த செய்தி மற்றும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments