Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4000 ஆண்டு பழமையான மம்மி: அருங்காட்சியத்தில் ஆச்சரியம்

Advertiesment
மம்மி
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (12:38 IST)
கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் 4000 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

எகிப்து நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி முக்கோண வடிவில் கல்லறை ஒன்று எழுப்புவார்கள். அதன் பெயர் பிரமிடு. அந்த பிரமிடுக்குள் இருக்கும் சடலங்களை மம்மி என அழைப்பார்கள்.

இந்நிலையில் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மம்மி ஒன்று, கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, ராணியா அகமது என்ற எகிப்திய பெண் ஒருவர், இந்த மம்மியை ஆராய வந்தார். அவர் ஆராய்ந்த பிறகு, மம்மியை பாதுகாக்கப்படும் பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால், மம்மி மீது பூஞ்சைகள் வளரக்கூடும் என, 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்கும்படியும் யோசனை கூறினார். இதன் பிறகு இந்த மம்மியை மிகவும் பாதுகாத்து வருகின்றனர்.
webdunia

இது குறித்து அருங்காட்சியக இயக்குனர்,
நிபுணர் ராணியா அகமதின் ஆலோசனைக்கு பிறகு மம்மியை கூடுதல் கவனத்தோடு பாதுகாத்து வருகிறோம், இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது, ஆகவே அதனை தவிர்க்க காற்று புகாத அறையில் வைத்துள்ளோம் என கூறினார்.

மேலும், பெட்டியின் ஈரத்தனமையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும், நிறம் மங்காமல் இருக்க குறைவான ஒளியில் வைத்துள்ளதாகவும் கூறினார். சுமார் 4000 ஆண்டுகள் பழமையான மம்மியை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடும் ஆர்வமாகவும் கண்டுகளிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப.சிதம்பரம் இந்த பூமிக்கு பாரம் – விளாசிய எடப்பாடி பழனிச்சாமி