Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞரின் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

Advertiesment
கலைஞரின் சிலையை திறந்து வைத்த மேற்கு வங்க  முதல்வர்  மம்தா பானர்ஜி...
, புதன், 7 ஆகஸ்ட் 2019 (17:31 IST)
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.  இதில் திமுக தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்து ஒராண்டு ஆனதை ஒட்டி, இன்று அவரது சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு கலைஞரின் சிலையை திறந்து வைத்தார்.
 
இவ்விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்கள் போன்றோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். முக்கியமாக கி. வீரமணி, நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
 
கருணாநிதியின் சிலை 6.3 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் மொத்தம் 30 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட சிலையின் பீடத்தில்  கருணாநிதியின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 
webdunia
இதனையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி,அங்கு அவர்கள் இருவருக்கும் மரியாதை செலுத்தினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது - பிரேமலதா விஜயகாந்த்