உத்தர பிரதேசத்தில் தனக்கு அபராதம் விதித்த காவல் நிலையத்திற்கு மின் சப்ளையை துண்டித்த மின்வாரிய ஊழியரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பரேலி அருகே தலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப் என்பவருக்கு ஹர்தாஸ்புர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரூ.500 அபராதம் விதித்துள்ளார். அதை தொடர்ந்து அபராதம் விதித்த காவல் ஆய்வாளர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை பகவான் ஸ்வரூப் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, காவல்நிலையம் மின்சார மீட்டர் பொருத்தாமலே மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு மின் இணைப்பை துண்டித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்டர் இல்லாமல் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதற்காக அபராதம் செலுத்த சொல்லி மின்வாரிய காவல்துறைக்கு நொட்டீஸும் அனுப்பியுள்ளதாம்.