உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் பகுதியில் மாட்டுச்சாண சேமிப்பு ஆலை அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் பகுதியில் மாட்டுச்சாண சேமிப்பு ஆலை அமைக்க உ.பி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பி அரசு கன்னூஜில் வாசனை திரவிய ஆலை அமைப்பதற்கு பதிலாக மாட்டுச்சாண சேமிப்பு ஆலை அமைக்கிறது என விமர்சித்து பேசியுள்ளார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாட்டுச்சாணத்தில் நாற்றத்தை அகிலேஷ் யாதவ் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. சாணத்தை கடவுள் லட்சுமியின் வடிவமாக அவர் பார்த்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார். எருமை பாலின் தாக்கம் அவரது பேச்சில் வெளிப்படுகிறது” என பேசியுள்ளார்.