யூடியூபில் முதல் முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ எதுவென யூடியூப் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
யூடியூப் என்பது காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005ல் தொடங்கப்பட்டது. யூடியூப் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகும் பொழுதுபோக்கிற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் யூடியூபில் முதல் முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ எதுவென யூடியூப் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் யூடியூப் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் Me at the zoo என இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
19 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ யூடியூப் எப்படி தொடங்கியது என்பதைக் காட்டுகிறது. யூடியூப் முதல் வீடியோவில் இருந்து எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று சிலர் யோசித்தாலும், மற்றவர்கள் வீடியோவைக் கண்டு வியப்படைந்துள்ளனர். இரண்டு நாட்களில் இந்த பதிவு 1.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.