Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த நபர்; காப்பாற்றிய போலீஸ்! – வைரலாகும் வீடியோ!

Advertiesment
Uttar Pradesh
, செவ்வாய், 31 மே 2022 (15:48 IST)
உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்தபோது போலீஸார் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது அதன் படிக்கட்டுகளில் சிலர் அமர்ந்து பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் தவறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.

அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டபோது துணிகரமாக செயல்பட்ட ரயில்வே காவலர் நேத்ரபால் சிங் என்பவர் பயணியை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இதை பகிர்ந்துள்ள உத்தர பிரதேச போலீஸ், ரயிலில் ஆபத்தான வகையில் பயணிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுபிஎஸ்சி தேர்வில் பின்தங்கிய தமிழகம்...