Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த தம்பதியினர்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

Advertiesment
குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த தம்பதியினர்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:49 IST)
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு பொறியாளர் ரம்பவன். இவரது மனைவி துர்காவதி. கடந்த மாதம் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ரம்பவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரம்பவன் வீட்டில் 8 மொபைல் போன்கள், பாலியல் விளையாட்டு சாதனங்கள், 8 லட்ச ரூபாய் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல்ரீதியாக படமெடுத்து விற்பனையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கு உதவியாக இருந்ததற்காகவும், ஆதாரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாலும் ரம்பவன் மனைவில் துர்காவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு: மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.