Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

64 வயதில் நீட் எழுதி காலெஜ் செல்லும் முதியவர்! – ஒடிசாவில் அதிசய சம்பவம்!

Advertiesment
64 வயதில் நீட் எழுதி காலெஜ் செல்லும் முதியவர்! – ஒடிசாவில் அதிசய சம்பவம்!
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:05 IST)
ஒடிசாவில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 64 வயதான ஜெய்கிஷோர் பிரதான் பாரத் ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வான நீட் தேர்வை எழுதிய ஜெய்கிஷோர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

இவருக்கு மாநில அரசின் வீர் சுரேந்திர சாய் பல்கலைகழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. வயதான நபர் ஒருவர் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு வகுப்பில் அடியெடுத்து வைப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளிருக்கு அடக்கமா சரக்கு அடிக்காதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!