Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கும் சீனா! – சுட்டுத்தள்ள இந்தியா திட்டம்?

Advertiesment
National
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (09:30 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது முதல் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சீனாவுடன் இந்தியாவிற்கு எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ ரீதியான உதவிகளை செய்ய தொடங்கியுள்ளது.

அதன்படி பாகிஸ்தானுக்கு சீனா 50 ஆளில்லா உளவு விமானங்களை அளிக்க உள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் ஆளில்லா விமானங்களை கொண்டு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வேவு பார்க்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆளில்லா விமானங்கள் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் எல்லையில் எதிரி நாட்டு ட்ரோன்கள் உளவு பார்ப்பதை தவிர்க்க இஸ்ரேலிடம் இருந்து ஸ்மாஷ் 2000 என்ற அதிநவீன ட்ரோன் தடுப்பு சாதனங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோழியே இல்லாம கோழி இறைச்சி! – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி!