இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரியை குறைப்பதற்கு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ நிபந்தனை விதித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க வர்த்தக ஆலோசகர் நவரோ, "இந்தியாவின் மீதான வரியை குறைக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவின் மீதான வரியை 25% வரை குறைப்போம்" என்று தெரிவித்துள்ளார். இது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இப்படி ஒரு நிபந்தனையை முன்வைத்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை ஒருபோதும் நிறுத்த போவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்டகால உறவு மற்றும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்தியாவின் தற்காப்பு கொள்கை காரணமாக, அமெரிக்காவின் இந்த நிபந்தனையை இந்தியா ஏற்காது என எதிர்பார்க்கப்படுகிறது.