Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

Siva
புதன், 23 ஜூலை 2025 (12:21 IST)
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தியதாக இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, இரண்டு இளம் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களை தனியாக அழைத்து விசாரித்தனர்.
 
அவர்களது கைப்பையைத் திறந்து பார்த்தபோது, அதில் 40க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன. அந்த சோப்புகளை பிரித்துப் பார்த்தபோது, அவற்றின் உள்ளே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது 14.65 கிலோ கோகைன் போதைப்பொருள் என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 
ரூ.14.69 கோடி என்றும் கூறப்படுகிறது.
 
இதையடுத்து, இரண்டு இளம் பெண்களையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் மிசோரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
 
இதனை தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இரண்டு இளம் பெண்கள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments