இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டு Clientஐ வரவேற்க ஊழியர்களை நடனமாட வைத்த வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என பல பகுதிகளிலும் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களோடு ஒப்பந்தத்தில் உள்ள Clients அவ்வபோது ஐடி நிறுவனங்களுக்கு வருகை தருவது வழக்கமாக உள்ளது. சமீபமாக அப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வந்த வெளிநாட்டு Clientஐ வரவேற்க, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தி, தெலுங்கு என பல மொழி பாடல்களுக்கும் அவர்கள் ஆட, அந்த வெளிநாட்டு க்ளையண்டும் அதனால் குஷியாகிறார். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் இதற்கு கண்டனங்களையும், விமர்சனங்களையுமே முன்வைத்துள்ளனர். நிறுவனத்தில் நாம் பார்க்கும் வேலைக்குதான் சம்பளம் கொடுக்கிறார்கள், நாம் நமது வேலையால் க்ளையண்டுகளை மகிழ்விக்கலாமே தவிர, இப்படி டான்ஸ் ஆடி குஷிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பேசி வருகின்றனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனடாவை சேர்ந்த இந்திய முதலீட்டு ஆலோசகர் ஜெயந்த் பந்தாரி “இது ரொம்பவே க்ரிஞ்சா இருக்கு. சூப்பர், சூப்பர் க்ரிஞ்சா இருக்கு. இந்த இளம்பெண்கள், பெண்கள் மற்றும் அனைவரும்... ஐயோ கடவுளே. அவங்களுக்கு கொஞ்சம் மரியாதை, கொஞ்சம் சுயமரியாதை கிடைக்கும்னு நம்புறேன். ஐரோப்பியர்களை கடவுள் மாதிரி நடத்துறதை நிறுத்துங்க. அவங்க முதலில் தங்களைப் பத்தி இன்னும் நேர்மறையா யோசிக்க ஆரம்பிக்கணும்” என்று பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K