Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

Advertiesment
Actor Srikanth drug case

Prasanth K

, செவ்வாய், 22 ஜூலை 2025 (13:20 IST)

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக போலீஸார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் பிடிபட்ட ப்ரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, இந்த போதைப்பொருள் வளையத்தில் உள்ள பலரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

 

இந்நிலையில் சம்மனை ஏற்று விசாரணைக்கு வந்த பலரிடம், உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் கொடுங்கள் என்று ஒரு இன்ஸ்பெக்டரும், 2 சப் இன்ஸ்பெக்டர்களும் சேர்ந்து லட்சக்கணக்கில் வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரூ.50 லட்சம் வரை பணம் கைமாறியிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களது வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை சோதனை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!