Publish Date: Fri, 29 Apr 2022 (17:48 IST)
Updated Date: Fri, 29 Apr 2022 (17:52 IST)
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் சரிவடைந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது
இன்று காலை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து சென்செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 57060 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் குறைந்து 17102 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரம் மூன்று நாட்கள் சென்செக்ஸ் சரிந்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது