Publish Date: Thu, 28 Apr 2022 (09:19 IST)
Updated Date: Thu, 28 Apr 2022 (09:21 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த நிலையில் இன்று சுமார் 250 புள்ளிகள் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் 57099 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 17125 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்தும் சரிந்தும் வருவது முதலீட்டாளர்களுக்கு குழப்பநிலையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது