Publish Date: Fri, 29 Apr 2022 (17:47 IST)
Updated Date: Fri, 29 Apr 2022 (17:48 IST)
சீனாவில் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் உள்பட பல வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க சீனா அரசு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் இருந்த சிக்கல் நீங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது
இதனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் உயர் படிப்பை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்