3 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:32 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,97,99,202 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 614 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,90,462 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,70,71,898 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,36,842 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments