Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர் - ராம்சரண் படத்தின் முக்கிய அப்டேட்..

ஷங்கர் - ராம்சரண் படத்தின் முக்கிய அப்டேட்..
, திங்கள், 24 ஜனவரி 2022 (23:06 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிற்குள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு  அடுத்தாண்டு பொங்கலுக்கு பான் இந்தியா படமாக வெளியாகும் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இப்படப் பணிகள் முடிந்தபின், அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு காஷ்மீரில் ஜிலுஜிலுன்னு சுற்றித்திரியும் ஜனனி ஐயர்!