உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் தங்கள் வியூகபடி உலக நாடுகள் செயல்பட்டால் இந்த ஆண்டே கொரோனா முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க உலக நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்தாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளால் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு முடிவுக்கட்டுவது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது. நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.