திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (14:45 IST)
வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால், திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 
பாரம்பரிய விதிகளின்படி, கிரகணம் தொடங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே, செப்டம்பர் 7-ஆம் தேதி மதியம் 3:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். இந்த காலக்கட்டத்தில், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது.
 
செப்டம்பர் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் சடங்குகள் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம் போல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
 
சந்திர கிரகணத்தையொட்டி, செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments