Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’டிக் டாக்கில் ’ வெளியிட்ட வீடியோ விவகாரம்! அரசு ஊழியர்கள் இடைநீக்கம் !

’டிக் டாக்கில்  ’ வெளியிட்ட வீடியோ விவகாரம்! அரசு ஊழியர்கள்  இடைநீக்கம் !
, வியாழன், 18 ஜூலை 2019 (17:13 IST)
இன்றைய உலகம் சமூக ஊடகங்களின் பின்னர் ஓடிக்கொண்டுள்ளது. அதனால் அன்பு குறைந்தி மனித நேயம் மறந்து, வெறும் போட்டோவுக்கும் செல்பிக்காக மட்டுமே நேரங்களை கடத்திக் கொண்டு வாழ்க்கையைக் கடத்திக்கொண்டுள்ளோம். இந்த சமூக வலைதளத்தில் சமீபத்திய வரவான டிக்டாக் திறமையாக ஏழை இளைஞர்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது பாராட்டுக்குறியது என்றாலும் கூட. பல குடும்பங்கள் இதனால் சீரழிந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் பணிநேரத்தின் போது, டிக்டாக் வீடியோ எடுத்து, அதை வெளிட்டுள்ளனர். அதில் மாநகராட்சி ஊழியர்கள் ஆண் - பெண் இருபாலரும் கூட்டமாக சேர்ந்து ஆடுவதும் பாடுவது வசனம் பேசுவது போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
சமீபத்திய வரவாக இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை அடுத்து, இதுகுறித்து தகவல்  மாநகராட்சி ஆணையருக்குச் சென்றது. இதனையடுத்து பணிநேரத்தில் பொறுப்பின்றி டிக்டாக் வீடியோ வெளியிட்ட் அ 9 ஒப்பந்த ஊழியர்களை இடைநீக்கம் செய்து மாநகராட்சி ஆனையார் உத்தரவிட்டார்.அத்துடன் அவர்ளி 10 நாள் சம்பளமும் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயிலில் அடிபட்டு சிதைந்து போன வாலிபர்.. சென்னை அருகே நடந்த கொடூரம்