Publish Date: Thu, 18 Jul 2019 (16:58 IST)
Updated Date: Thu, 18 Jul 2019 (17:03 IST)
அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு சிதைந்து போன நிலையில் வாலிபர் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த செஞ்சி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில், 35 வயது மதிக்கத்தாக ஆணின் சடலம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? தற்கொலை செய்து கொள்ள எண்ணி தண்டவாளத்தில் விழுந்தாரா? அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என போலீஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.