டீன் ஏஜ் பெண்ணை கற்பழித்து, அம்மணமாக்கி ரோட்டில் விட்ட மூவர்: ராஜஸ்தானில் பகீர்!

வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:55 IST)
ராஜஸ்தானில் டீன் ஏஜ் பெண்ணை கற்பழித்து, அம்மணமாக்கி ரோட்டில் விட்ட கொடூரர்கள் மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
ராஜஸ்தானில் பிஷ்வாரா எனும் பகுதியில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை 15 வயதான பெண் தனது க்ரு தோழிகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 
 
அப்போது வழியின் இவர்களை மூன்று பேர் வழிமறித்து தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது மூவரும் தப்பித்து ஓடியுள்ளனர். ஆனால், ஒருவர் மட்டும் சிக்கிவிட குடி போதையில் இருந்த அந்த மூவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். 
 
பின்னர் அப்பெண்ணை ஆடைகள் கூட இல்லாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். அந்த வழியே சென்ற சிலர் பெண்ணை பார்த்து காப்பாற்ற, தற்போது அந்த பெண் மூவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 
 
அந்த மூவர் யார் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் போலீஸார் அவர்களை கைது செய்து போக்சோ மற்றும் ஐபிசி 376டி வழக்குகள் போடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...