இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:35 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், ஹரித்துவார் ரயில் மிகவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இதுகுறித்து அந்த ரயில்வே எல்லைக்குட்பட்ட பண்டிகுள் போலீஸ்  ஸ்டேசன் அதிகாரி  ராஜேந்திர குமார், தற்கொலை செய்துகொண்ட பெண் சுப்ரியா குர்ஜியார் (30 ), மற்றும் அவரது இரு குழந்தைகள் மகன் கோலு (6), மகள் அன்கிடா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
ரயில் அடிபட்டு இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அமேசான் காட்டுத்தீ: 2500 கிமீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை