பல மாணவிகளை பலாத்காரம் செய்து ... வீடியோ எடுத்து விற்ற தம்பதியர்... பகீர் சம்பவம்

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:40 IST)
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பியர், சுமார் 45 மாணவிகளை இரக்கமே இல்லாமல்  வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து இணையதளங்களில் பணத்துக்காக விற்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் ராவல் பிண்டி என்ற பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கல்லூரி முடிந்து தான் பேருந்துக்காக நின்றிருந்த போது , ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு , வெகு இயல்பாக என்னிடம் பேசினார். பின் தன் சகோதரர் வருகைக்காக காத்திருப்பதாகவும் , வாகனத்தில் செல்லும் போது உன்னை இறக்கிவிடுவதாகவும் என்னிடம் கூறினர்.
 
அதன்பிறகு அவரது சகோதர் வந்தபிறகு என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைத்தார். என்னை காரில் ஏறும் படி கட்டாயப் படுத்தினார்கள்.அப்போது காரில் ஏறியதும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். அதன்பிறகு குலிஸ்தான் காலனி பகுதிக்குள் இருந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு வெளியே சொன்னால் மிரட்டுவோமென மிரட்டினார்கள். பின்னர் தான் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று தெரியவந்தது என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கூறிய முகவரிக்கு சென்ற போலிஸார் குறிப்பிட்ட வீட்டை கண்டுபிடித்து அந்த குற்றவாளி தம்பதியரைக் கைது செய்தனர்.
 
அவர்களிடம் விசாரிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. அதில்,மாணவிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்வதையும், அதை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் பணத்திற்க்காக விற்பனை செய்ததையும் தெரிவித்தனர். இதுபோல் இதுவரை 45 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளதையும் தெரிவித்தைக் கேட்டு போலீஸார் அதிர்ந்து விட்டனர். 
இதுகுறித்து  போலீஸார் கூறுகையில் : கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் மேலும் விசாரணை செய்துவருகிறோம். இவர்கள் வேறு யாருடனாவது இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை- ஒரே நாளில் 304 ரூபாய் உயர்வு !