Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதி, மத பேதமில்லாமல் வாழ.. இப்படி நடக்கக்கூடாது! - பஹல்காம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பத்மபூஷன் அஜித்குமார்!

Advertiesment
Padma Bhushan ajithkumar

Prasanth Karthick

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (08:40 IST)

நேற்று இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித்குமார், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த தவறிய பாகிஸ்தானுக்கு இந்தியா பல தடைகளை விதித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பத்ம பூஷன் பதக்கத்தை பெற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது ”பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி வருந்துகிறேன். இந்த சம்பவத்தில் அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என நம்புகிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்.

 

எல்லையில் நம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில் சாதி, மத பேதம் கலைந்து நல்லிணக்கமாக வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இல்லாமல் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!