Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!

Advertiesment
இந்தியா

Siva

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (07:44 IST)
இந்தியா போர் நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது என்றும், இந்தியா போரை தொடங்கினால் அந்நாட்டின் மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூல வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார். பாகிஸ்தான் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இந்தியா ராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் போர் பதட்டத்தை தணிக்க அரபு நாடுகள், சீனா, பிரிட்டன், அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசிவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்று பாகிஸ்தான் கூறியிருப்பது ஊர் பதட்டத்தை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!