மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல்- டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் –ரூ.100 ஐ தாண்டிவிட்டது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே மக்கள் மோட்டார் வாகனங்களுக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து AVON என்ற சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாவது: பெட்ரோல் விலை உயர்வு கொரொனா காரணமாக சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.